நாட்டரிசி... ஒரு கிலோ இன்று முதல், 98 ரூபாய்க்கு விற்பனை
#SriLanka
#rice
#prices
Mugunthan Mugunthan
3 years ago

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர், இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



