ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை சமர்ப்பிப்பு.

#SriLanka #Geneva #LANKA4 #Human Rights #report #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை சமர்ப்பிப்பு.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, தன்னிச்சையான கைதுகள், நீண்டகாலத் தடுத்து வைப்பு, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் சில முக்கிய குற்றச்செயல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்கு கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர மேலும் நடவடிக்கைகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4