போதைப்பொருள் குற்றச்சாட்டில் 40,000 கைதிகள்!

#SriLanka #LANKA4 #prisoner #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
போதைப்பொருள் குற்றச்சாட்டில் 40,000 கைதிகள்!

தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அவற்றில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக அமைச்சர் விஜேபால கவலை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4