ராணுவ ஆட்சிக்கு எதிராக சூடான் மக்கள் போராட்டம்

சூடானில் ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கண்கான மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளானர்
சூடானில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனால், தேர்தல் நடைபெறும் வரை பிரதமர் அப்துல்லா ஹம்தோக் தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பிரதமரும் அமைச்சரும் கைது செய்து தலைநகரை மொத்தமாக ராணுவம் கைப்பற்றியது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா பர்ஹன் தொலைக்காட்சியில் தோன்றி இடைக்கால அரசை கலைப்பதாக அறிவித்தார்.
தேர்தல் நடைபெறும் வரை அங்கு ராணுவ ஆட்சி நடைபெறும் எனவும் அரசியல்வாதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டகாரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இது வரை 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு இணைய சேவை முழுவதுமாக முடக்கப்படுள்ளது.



