ஆர்யாவுக்கு ஜோடியாகும் பிரபல சீரியல் நடிகை!

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் சமீபத்திய திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
அந்த வகையில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் அடுத்ததாக அரண்மனை3 வெளியாக இருக்க பிரபல இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் புதிய வெப்சீரிஸில் நடிக்க இருக்கும் ஆர்யாவுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
தொடர் தோல்வி மற்றும் சுமாரான படங்களை கொடுத்து வந்த ஆர்யா இப்பொழுது கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிற அதேசமயம் முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சார் பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போயிருக்க ஆர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்களை காண அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா பேயாக மிரட்ட இருக்கும் அரண்மனை 3 வரும் ஆயுதபூஜைக்கு ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் ஆர்யா அடுத்ததாக நெற்றிக்கண் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இதில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்க கதாநாயகியாக பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.



