இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#School
Yuga
3 years ago

ஆரம்ப பாடசாலைகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாதிவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க சுகாதார அமைச்சு, சுகாதார வழிகாட்டியை அண்மையில் கல்வி அமைச்சின் செயலாளரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



