ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. பயணிக்கலாம்..!!
Keerthi
3 years ago

பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தன்னுடைய முதலாவது மின்சாரக் காரை அறிமுகம் செய்கிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
100 கி.வாட் பேட்டரி கொண்ட இந்த மின்சாரக் காரை, ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் பயணம் செய்யலாம் என அந்நிறுவனம் கூறி உள்ளது.
மின்சார காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. ஏற்கெனவே ரோல்ஸ் ராய்ஸ், அடுத்த 20 ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



