ஆரம்பமாகிறது ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர்

#world_news
Yuga
3 years ago
ஆரம்பமாகிறது ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இன்று(21) ஆரம்பமாகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதுடன், இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தூது குழுவினர் நியூயோர்க்கை சென்றடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை(22) உரையாற்றவுள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்பு கூட்டத்தொடரிலும், எதிர்வரும் 24ஆம் திகதி எரிசக்தி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!