பலத்த பாதுகாப்புடன் ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்

#China #NorthKorea #President #Train #Visit
Prasu
6 hours ago
பலத்த பாதுகாப்புடன் ரயிலில் சீனா சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன்

வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இவரது தலைமையில் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. 

அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார். அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வெளியில் காண்பது அரிதாகும். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் அரிது. 

ரஷியா அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு மட்டும் எப்போதாவது சுற்றுப் பயணம் மேற்கொள்வது உண்டு. இந்த நிலையில் இன்று கிம்ஜாங் உன் சீனா சென்றடைந்துள்ளார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்டு இன்று சீனா சென்றடைந்துள்ளார். 

குண்டு துளைக்காத பிரத்யேக ரெயில் மூலம் சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் ராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 2023ஆம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து, புதினை சந்தித்து பேசினார். 

அதன்பின் இதுதான் அவருடைய வெளிநாட்டு பயணம். இதற்கு முன்னதாக 2019-ல் கிம் ஜாங் உன் சீனா சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதுடன், வீரர்களும் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!