இன்றைய வேத வசனம் 16.9.2021

#Bible #Prayer
Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 16.9.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் நின்றபோது, அவனோடிருந்தவர் யார் என்று ஆகாப் ராஜா அறியாதிருந்தான்.

எலியா ஒரு சாதாரண மனிதனே, ஆனால் அவன் கர்த்தருடைய வல்லமையில் நிலைத்திருந்தபடியால், எலியாவின் தேவனும், அவனோடுகூட கர்மேல் பர்வதத்தின் மேல் ஏறினார்.

கிதியோனுடைய பட்டயம் எல்லாருடைய பட்டயம் போல சாதாரணமாயிருந்தாலும், தேவ வல்லமை அதில் இணைந்திருந்தது. எனவே மீதியானியர் ஓட்டம் பிடித்தனர்.

சிம்சோன் கையிலிருந்தது, சாதாரண கழுதையின் தாடை எலும்பு தான். ஆனால் தேவ வல்லமையின் பெலத்தை, அதனோடு இணைந்த சிம்சோன் ஆயிரம் பெலிஸ்தியரைக் கொன்று போட்டான்.

மூன்று எபிரேய வாலிபரை நெருப்பில் போட்டார்கள். அவர்களோடு நடந்த நாாலம் ஆள், அறியப்படாதவர். அவர் அவர்களோடு உலாவி, நெருப்புச்சூளையை, பசுமையான புல் தரையைப் போல் மாற்றி விட்டார். தேவனோடு நடப்பவர்களுக்கு எவ்வித தீங்கும் நேரிடாது.

தாவீதின் கைகளிலிருந்த கவணும், கல்லும் மிகச் சாதாரணமானவை தான். தாவீதின் தேவ வைராக்கியத்தால் இணைந்திருந்தபடியால், கர்த்தர் கவண், கல்லோடு இணைந்து விட்டார். வெற்றி தேவ மக்களுக்குத் தான்.

தேவ பிள்ளைகளே நீங்கள் சாதாரணமானவர்களல்ல! கர்த்தர் உங்களோடிருக்கிறார்! ஆமென்

ஏசாயா 43:2
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!