நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை 30 ரூபாயால் குறைப்பு
#SriLanka
#prices
#Fuel
#LANKA4
#petrol
#L4
Prasu
57 minutes ago
இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அந்தத் திருத்தத்திற்கு அமைய, ஒக்டேன் 92 லங்கா பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 30.00 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 394 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.