பாகுபலியின் சாதனையை 23 நாட்களிலேயே முறியடித்த ‘ராமாயணா’

#India #TamilCinema #LANKA4 #Collection #Movie #Record #L4
Prasu
28 minutes ago
பாகுபலியின் சாதனையை 23 நாட்களிலேயே முறியடித்த ‘ராமாயணா’

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம் கடந்த நவம்பர் 5ம் திகதி வெளியானது. வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், உலகளாவிய வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

‘ராமாயணா’ திரைப்படம் வெளியான 23 நாட்களில் உலகளவில் ரூ.1,790.10 கோடி வசூலித்துள்ளது. 

இதில் இந்தியாவில் மட்டும் ரூ.1,195.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.595 கோடியும் வசூலாகியுள்ளது.

இதன் மூலம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் உலகளாவிய வாழ்நாள் வசூலான ரூ.1,788.06 கோடியை ‘ராமாயணா’ முறியடித்துள்ளது.

உலகளவில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் புதிய இடத்தைப் பிடித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!