சூரிச், லுசேர்ன் மாநிலங்களில் தமிழ் நிறுவனங்களில் வேலை செய்த பலர் கைது!

#ARREST #SWITZERLAND #Tamil People #LANKA4 #Zurich #L4
Prasu
23 minutes ago
சூரிச், லுசேர்ன் மாநிலங்களில் தமிழ் நிறுவனங்களில் வேலை செய்த பலர் கைது!

வணக்கம் லங்கா4 ஊடக நேயர்களே, மீண்டும் ஒரு சிறப்பு செய்தியோடு இலங்கையன்.

சுவிட்சர்லாந்திலே 25-11-2026 காலை கிட்டத்தட்ட 3 மணி அளவில் பல ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஈழத் தமிழர்கள் மாத்திரம் இன்றி இந்தியர்கள் மற்றும் சில ஆப்பிரிக்கர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

தமிழ் வர்த்தக நிறுவனங்களில் வேலை புரிந்த, தொழில் புரிந்த பலர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கை லுசேர்ன் மற்றும் சூரிச் மாநிலங்களில் உட்பட பல மாநிலங்களில் இடம்பெற்றுள்ளது.

அதே வேளையிலே சில கோவில்களிலும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தி. ஆனால் தமிழ் நிறுவனங்களில் வேலை செய்த பலர் கைது செய்யப்பட்டது ஊர்ஜிதமான செய்தி ஆகும். 

ஆனால் இந்தக் கைது நடவடிக்கை அவர்கள் விசா இல்லாமல் வேலை செய்தார்களா அல்லது வேலை செய்கின்ற அனுமதிப் பத்திரம் இல்லாமல் வேலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணம் என்று தெரியவில்லை. 

நிச்சயமாக ஒன்று அவர்கள் வேலை செய்கின்ற அனுமதிப் பத்திரம் இல்லாமல் அல்லது சுவிட்சர்லாந்திலே தங்கியிருக்கின்ற விசாக்கள் இல்லாமல் அவர்கள் பிளாக் மார்க்கெட்டில் அதாவது மறைவாக பதிவு இல்லாமல் வேலை செய்தவராக இருக்கலாம் என்று ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன. 

அதுவும் தமிழ் நிறுவனங்களில் வேலை செய்த இந்தியர்கள், இலங்கை ஈழத் தமிழர்கள் உட்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டதாக இந்தச் செய்தி முழுமையாக உங்களுக்கு ஊர்ஜிதப்படுத்தப்பட்ட செய்தியாக உங்களுக்கு லங்கா4 ஊடகம் தருகிறது.

தொடர்ந்தும் இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள், என்ன நடந்தது என்பதை நாங்கள் இன்று அல்லது நாளை உங்களுக்கு ஒரு விரிவான செய்தியாக தர காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

இலங்கையன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!