தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வழக்கு பதிவு

#India #Parliament #LANKA4 #Harassment #Member #Case #L4 #TVK
Prasu
29 minutes ago
தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு, தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளார். 

இந்நிலையில், அருள் விக்னேஷின் செல்போனை பறிமுதல் செய்து சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும்,அருள் விக்னேஷ் மீது 3 கடுமையான பிரிவுகளில் ஜாமினில் வர முடியாத அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 75, 78, 79 மூன்று பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!