உணவுப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய இராச்சியமும் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய இராச்சியமும் உணவு வர்த்தகத் தடைகளைக் குறைக்கும் சுகாதார மற்றும் தாவர சுகாதார (SPS) ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முடித்துள்ள.
இந்த ஒப்பந்தத்தை 2028, மார்ச் 1 முதல் செயல்படுத்த ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய இராச்சியமும் திட்டமிட்டுள்ளன, இருப்பினும் அதற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
குறிப்பாக, SPS ஒப்பந்தமானது, தற்போது தேவைப்படும் வர்த்தகச் சான்றிதழ்கள் அல்லது எல்லைக் கட்டுப்பாடுகள் இன்றி, கிரேட் பிரிட்டன் மற்றும் அதன் அரசு சார்ந்த பகுதிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் விலங்குகள், விலங்குப் பொருட்கள், தாவரங்கள் மற்றும் தாவரப் பொருட்களின் போக்குவரத்தை அனுமதிக்கும்.
SPS ஒப்பந்தம் மற்றும் வின்ட்சர் கட்டமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், கிரேட் பிரிட்டனுக்கும் வடக்கு அயர்லாந்திற்கும் இடையிலான போக்குவரத்திற்கும் இதே நன்மைகள் நீட்டிக்கப்படும்.
அதே நேரத்தில், ஐக்கிய இராச்சியத்தின் உள் சந்தை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை ஆகிய இரண்டிற்கும் வடக்கு அயர்லாந்தின் தனித்துவமான அணுகல் தக்கவைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வரை, ஐக்கிய இராச்சியத்துடன் வர்த்தகம் செய்யும்போது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளுக்கான தற்போதைய விதிகள் பொருந்தும்.