அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க புதிய திட்டம்!

#SriLanka #School #LANKA4 #students #education
Mithra
1 hour ago
அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க புதிய திட்டம்!

அடுத்த ஆண்டுக்கான பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் பிக்குகள், இல்லற மாணவர்கள் மற்றும் பெண் பௌத்த துறவிகளுக்கு பரிசு வவுச்சர்கள் மூலம் பாதணிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் இரண்டு முறைகளின் கீழ் பாதணிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள மாணவர்கள் வழங்கப்படும் பரிசு வவுச்சர்களைப் பயன்படுத்தி திறந்த சந்தையில் தமக்கான பாதணிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.

அதேவேளை, மேல், தென், சபரகமுவ, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள மாணவர்களுக்கு உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்கள் நேரடியாகப் பாடசாலைகளுக்குச் சென்று பாதணிகளை வழங்கவுள்ளனர்.

இதேவேளை, அதிக மாணவர் நெரிசல் காணப்படும் பாடசாலைகளின் வகுப்பறைகளில் மாணவர் எண்ணிக்கையைக் கட்டம் கட்டமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளில் அதிகபட்சமாக 30 மாணவர்களையும், தரம் 6 முதல் தரம் 11 வரையான வகுப்புகளில் அதிகபட்சமாக 35 மாணவர்களையும் மட்டுப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், உயர்தர வகுப்பறைகளில் அதிகபட்சமாக 40 மாணவர்களை மாத்திரம் அனுமதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!