பல மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை!

#SriLanka #Rain #District #LANKA4 #Warning #lightning
Mithra
29 minutes ago
பல மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் நிலவுவதால், வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று (23) பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, கண்டி, குருநாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!