கடுகண்ணாவ பகுதியில் கண்டி – கொழும்பு பிரதான வீதி இன்று இரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!
#SriLanka
#Colombo
#kandy
#Road
#LANKA4
#closed
Mithra
22 minutes ago
கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதியில் இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) அதிகாலை 6.00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் சரிந்து விழும் அபாயம் உள்ள பாறைகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கண்டி – கொழும்பு இடையே பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.