காய்ந்த மிளகாய் விலை 2,500 ரூபாவைத் தாண்டும் அபாயம் !

#SriLanka #prices #government #Food #LANKA4 #Chile
Mithra
55 minutes ago
காய்ந்த மிளகாய் விலை 2,500 ரூபாவைத் தாண்டும் அபாயம் !

சந்தையில் காய்ந்த மிளகாய்க்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதால், அதன் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 2,500 ரூபாவைத் தாண்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தர நிர்ணயம் தொடர்பான பிரச்சினை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட காய்ந்த மிளகாய் அடங்கிய சுமார் 120 கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 1,050 ரூபாவிலிருந்து சுமார் 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிளகாய்த் தட்டுப்பாடு காரணமாக மிளகாய்த்தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல தொழிற்சாலைகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!