மரக்கறி விலைகள் விண்ணைத் தொடும் உயர்வு – எலுமிச்சை கிலோ 2,000 ரூபாய்!

#SriLanka #prices #Vegetable #LANKA4 #Market
Mithra
28 minutes ago
மரக்கறி விலைகள் விண்ணைத் தொடும் உயர்வு – எலுமிச்சை கிலோ 2,000 ரூபாய்!

சந்தையில் மேல்நாட்டு மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதால், வியாபாரிகளும் நுகர்வோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஹட்டன் சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,000 ரூபாய்க்கும், குடைமிளகாய் 950 முதல் 1,000 ரூபாய் வரையிலும், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி தலா 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோன்று, கரட், முட்டைக்கோஸ், புடலங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான வானிலையால் மரக்கறிச் செய்கைகள் பாதிக்கப்பட்டு, சந்தைக்கான விநியோகம் குறைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

விலையேற்றம் காரணமாக நுகர்வோர் கொள்வனவைக் குறைத்துள்ளதால் தமது வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பகுதி வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!