வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

#SriLanka #LANKA4 #North
Abi
18 minutes ago
வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – 75 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம், குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பதுளை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!