சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவல் – 1,500 கைதிகளுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

#SriLanka #Prison #LANKA4 #Vaccine #Safety
Mithra
37 minutes ago
சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவல் – 1,500 கைதிகளுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 21 முதல் 42 வயதுக்குட்பட்ட கைதிகளுக்கு தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 1,500 கைதிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான எஸ்.கே. பல்லேதன்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலைகளில் பல கைதிகளுக்கு தட்டம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் 8 ஆண் கைதிகளுக்கும் 7 பெண் கைதிகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுக் கைதி ஒருவர் ஊடாக சிறைச்சாலைகளுக்குள் தட்டம்மை நோய் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!