நுவரெலியா – அம்பேவெல – ஹோர்டன்தென்ன வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

#SriLanka #government #NuwaraEliya #Road #LANKA4 #Transport
Mithra
35 minutes ago
நுவரெலியா – அம்பேவெல – ஹோர்டன்தென்ன வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

நுவரெலியா பிளக்பூல் சந்தியிலிருந்து அம்பேவெல, பட்டிப்பொல ஊடாக ஹோர்டன்தென்ன வரையிலான 19 கிலோமீற்றர் நீளமான B512 வீதியைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டிட்வா புயலினால் சேதமடைந்த வீதிகளை மீளமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (22) கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2,143.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட மக்களின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வீதி, அம்பேவெல பண்ணை, நியூசிலாந்து பண்ணை மற்றும் அம்பேவெல தொடருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான போக்குவரத்துப் பாதையாகவும் விளங்குகிறது.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும் பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!