கிளிநொச்சி குளத்தின் கீழ் வாழ்வாதாரத்தை இழந்த 28 மீனவ குடும்பங்கள் – அதிகாரிகளின் அலட்சியமே காரணமா?

#SriLanka #Kilinochchi #LANKA4 #Official #Tank
Mithra
38 minutes ago
கிளிநொச்சி குளத்தின் கீழ் வாழ்வாதாரத்தை இழந்த 28 மீனவ குடும்பங்கள் – அதிகாரிகளின் அலட்சியமே காரணமா?

கிளிநொச்சி குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட 28 குடும்பங்களின் ஒரு வருட உழைப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

குளத்தின் துருசு உடைந்து நீர் வெளியேறும் அபாயம் குறித்து இரணைமடு மற்றும் கிளிநொச்சி குளம் மீன்பிடிச் சங்கங்கள் பலமுறை முன்கூட்டியே அதிகாரிகளுக்கு அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வங்கிகளில் கடன் பெற்று வலைகள் வாங்கி, ஒரு வருடமாக அறுவடைக்காகக் காத்திருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளின் அலட்சியம் குறித்து மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதுவரை எந்த அரசியல் பிரதிநிதிகளும் தம்மைத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவிக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட 28 மீனவ குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடும் நீதியும் வழங்கப்பட வேண்டும். அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!