இந்தோனேசியாவில் மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி - 36 பேர் மாயம்
#Death
#Indonesia
#LANKA4
#fire
#Rescue
#Building
#Missing
#L4
Prasu
26 minutes ago
ஜகார்த்தாவின் மேற்கே உள்ள ஒரு மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும் 36 பேரைக் காணவில்லை என்றும் இந்தோனேசிய மீட்பு குழு தெரிவித்துள்ளது.
தலைநகரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ள செராங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஃபோனுசா அகுங் முலியா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நான்கு பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ரிஸ்கி தெரிவித்தார்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களைப் பெற தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் திரண்டுள்ளனர்.