வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச ஊழியர்கள் போராட்டம்!

#SriLanka #Protest #government #Employees #LANKA4
Mithra
2 hours ago
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச ஊழியர்கள் போராட்டம்!

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (23) தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னெடுக்க அரச சேவை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார உதவிப் பணியாளர்கள், தாதியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அலுவலக உதவியாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கத் தவறினால், அஸ்வெசும நலன்புரித் திட்டம் மற்றும் விவசாயக் கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்ட மேலதிக கடமைகளிலிருந்து விலகப்போவதாக சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், கல்வித்துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்களும் நாளைய எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளன.

மேலும், தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!