2027 வரவு செலவுத் திட்டத்திற்கு பாராளுமன்றத்தில் 157 பேர் ஆதரவு – 97 மேலதிக வாக்குகளால் வெற்றி!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடந்த நவம்பர் 12ஆம் திகதி 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று (20) வரை ஏழு நாட்கள் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நாளை (21) முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த ஏனைய நாட்களில், சனிக்கிழமைகள் உட்பட காலை 9.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட விவாதத்திற்காகப் பாராளுமன்றம் கூடவுள்ளது