கிளிநொச்சியில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

#SriLanka #Accident #Kilinochchi #Hospital #LANKA4 #discussion
Abi
51 minutes ago
கிளிநொச்சியில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினால் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“ஊரோடு உரையாடுவோம்; நாமும் பொழுதும் நல்லதைச் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடல் எதிர்வரும் 24.11.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள K.K. திருமண மண்டபத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதன்போது, தற்கொலைகள், வீதி விபத்துகள், கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட முக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

எனவே, சமூக நலனில் அக்கறையுள்ள அனைவரையும் இக்கலந்துரையாடலில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!