அமெரிக்காவில் சோகம் – தொப்பியை விழுங்கிய பிரபல நீர்யானை ‘பியோனா’ உயிரிழப்பு!

#United_States #LANKA4 #Zoo
Abi
23 minutes ago
அமெரிக்காவில் சோகம் – தொப்பியை விழுங்கிய பிரபல நீர்யானை ‘பியோனா’ உயிரிழப்பு!

அமெரிக்காவின் சின்சினாட்டி மிருகக்காட்சிசாலையில் உலகளவில் பிரபலமடைந்திருந்த ‘பியோனா’ என்ற நீர்யானை, பின்னப்பட்ட தொப்பியொன்றை விழுங்கியதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளது.

மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்த பார்வையாளர் ஒருவர் வீசிய தொப்பி, மின்விசிறியில் பட்டு பியோனாவின் இருப்பிடத்திற்குள் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தத் தொப்பியை பியோனா விழுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, தொப்பியை அதன் செரிமானப் பாதையிலிருந்து வெளியேற்றுவதற்காக கால்நடை மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் பியோனா உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு குறைப்பிரசவத்தில் பிறந்த பியோனா, தனது உயிர்ப் போராட்டம் மற்றும் மீட்புப் பயணத்தின் மூலம் உலகளவில் பெரும் புகழ்பெற்றிருந்தது.

பியோனாவின் உயிரிழப்புச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டி வந்த ஏராளமான ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன், பலரும் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்து தமது அஞ்சலியைச் செலுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!