ருவன்வெலிசாயவில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆவேசம் – கூடாரங்கள் சேதம்!

#SriLanka #Protest #LANKA4 #Public #Kassapa Thero
Abi
16 minutes ago
ருவன்வெலிசாயவில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பொதுமக்கள் ஆவேசம் – கூடாரங்கள் சேதம்!

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து திரண்ட பொதுமக்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த பொதுமக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அத்துடன், தேரர்களுக்கு இடையிலும் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இராஜாங்கனை சத்தாரதன தேரர் தாக்கப்பட்டதுடன், அவரது காவி உடை அகற்றப்பட்டு போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த நவம்பர் 7ஆம் திகதி கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 11ஆம் திகதி கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!