வடக்கில் நவீன விவசாயத்தை ஊக்குவித்து இளைஞர்களை ஈர்க்கத் திட்டம்!

#SriLanka #Kilinochchi #government #LANKA4 #Plant #University #Ministry #Agriculture
Abi
19 minutes ago
வடக்கில் நவீன விவசாயத்தை ஊக்குவித்து இளைஞர்களை ஈர்க்கத் திட்டம்!

மண்வெட்டியுடன் விவசாயம் செய்வதைச் சமூகம் தாழ்வாகப் பார்ப்பதாக இளைஞர்கள் கருதுவதால், பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பலரும் விவசாயத்துறையைத் தவிர்த்து அரச தொழில்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ். சிவசிறீ தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இளைஞர்களை இத்துறையில் ஈர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநரின் வழிகாட்டலுடன் வடமாகாணத்தில் நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் ஊடாக விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன் புதிய தலைமுறை இளைஞர் விவசாயிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் கீழ் உள்ள திருவையாறு பகுதியில் இயந்திரப் பரசூட் முறையிலான நாற்றுநடுகை ஆரம்ப நிகழ்வு இன்று (12) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் வி. சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ். சிவசிறீ பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேலும், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் கே. பிரகாஸ், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனப் பொறியியலாளர் கே. சுஜீவன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!