பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை: வவுனியாவில் 750-க்கும் மேற்பட்ட கோன்கள் பறிமுதல்!

#SriLanka #Vavuniya #School #children #LANKA4 #Public
Abi
4 hours ago
பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து காலாவதியான ஐஸ்கிரீம் விற்பனை: வவுனியாவில் 750-க்கும் மேற்பட்ட கோன்கள் பறிமுதல்!

வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750-க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ்கிரீம் கோன்களைப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனத்தில் கொண்டு சென்று இக்காலாவதியான ஐஸ்கிரீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் கே. மேஜெயா தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த ஐஸ்கிரீம் கோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!