வவுனியாவில் திடீரென போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்து சாரதிகள்

#SriLanka #Vavuniya #Bus #drugs #LANKA4 #L4
Prasu
1 hour ago
வவுனியாவில் திடீரென போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பேருந்து சாரதிகள்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் இந்திக்க கப்புக்கொட அவர்களின் வழிகாட்டலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, அரச மற்றும் தனியார் பேருந்துகளின் 65 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் பொலிசார் தெரிவித்தனர். 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!