வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 1,300 பேர் கைது
பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டங்களின் போது 1,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குறைந்தது 50 காவலர்களும் மூன்று போராட்டக்காரர்களும் காயமடைந்தனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு உயர்வைக் கண்டித்து முக்கிய நகரங்களில் நடைபெற்ற, பெரும்பாலும் அமைதியான போராட்டங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களின் போது இந்த கைதுகள் நிகழ்ந்தன.
பிரான்ஸில் தொடர்ந்து இரண்டாவது வார இறுதியாகவும் இத்தகைய அமைதியின்மை நிலவி வருகிறது.
ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது இரண்டு பதவிக்காலங்களை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், அவருக்குப் பின் அடுத்த ஜனதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின் போது 75 இடங்களில் தீ வைக்கப்பட்ட சம்பவங்களுக்கு காவல்துறை பதிலளித்ததாகவும், 24 கடைகள் சூறையாடப்பட்டன என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.