முல்லைத்தீவில் 1,800 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் நாளை கையளிப்பு!
#SriLanka
#District
#Minister
#Mullaitivu
#Project
#LANKA4
#Public
Abi
1 hour ago
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,800 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கரும்புள்ளியான் நீர் வழங்கல் திட்டம் நாளை (28) மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 24,000 மக்களுக்குத் தூய்மையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.