ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்திக்கு பிரேசில் ஜனாதிபதி லூலா பதில்!
#SriLanka
#LANKA4
#Brazil
#President
#AnuraKumaraDissanayake
Abi
1 hour ago
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா பதிலளித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்தமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பொய்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ஜனநாயகம் வெல்லும் என்பதை பிரேசில் மக்கள் நிரூபித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மற்றும் பிரேசிலுக்கு இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும் எதிர்பார்ப்பதாக பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.