கொட்டகலையில் எரிவாயு விநியோகத்திற்கு கூப்பன் முறை அறிமுகம்!
கொட்டகலைப் பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களைச் சீராக வழங்கும் நோக்கில், கூப்பன் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மாதமொன்றுக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன.
கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட கூப்பனைச் சமர்ப்பித்த பின்னரே சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது நடைமுறைப்படுத்தப்பட்ட கூப்பன் முறைமையை மீண்டும் அறிமுகப்படுத்தி, விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர், சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச எரிவாயு விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கு எரிவாயுவைச் சமமாகவும் ஒழுங்காகவும் விநியோகிப்பதே இத்தீர்மானத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.