யாழில் துயரம் - பிரசவத்திற்கு பின் வீடு திரும்பிய இளம் தாய் உயிரிழப்பு!
#SriLanka
#Jaffna
#Death
#Investigation
#LANKA4
Thamilini
2 hours ago
யாழ்ப்பாணம் – கண்டாமை, தொல்புரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் தாயொருவர் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த 19ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தனது முதலாவது ஆண் குழந்தையைப் பிரசவித்து வீடு திரும்பிய நிலையில் இந்த துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டைச் சென்றடைந்த அவர், இரவு 7.30 மணியளவில் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.