சீரற்ற காலநிலை: சப்ரகமுவ மாணவர்களுக்கு செய்முறைப் பரீட்சைக்கு மாற்றுத் திகதி!
#SriLanka
#weather
#exam
#LANKA4
#students
#Adviser
Abi
1 hour ago
சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணங்களில் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்று (27) நடைபெறும் நிலையில், சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு சப்ரகமுவ மாகாணத்திற்கான பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மாற்றுத் திகதி தொடர்பான மேலதிக அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.