சாதாரண தர அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

#SriLanka #School #exam #LANKA4 #education
Abi
1 hour ago
சாதாரண தர அழகியல் பாட செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2026 டிசம்பரில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் இன்று (27) ஆரம்பமாகின்றன.

பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இசை, நடனம், நாடகம் மற்றும் அரங்கியல் ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இதற்கான அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் தமது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!