மழையுடன் தீவிரமடையும் டெங்கு பரவல்: இதுவரை 79 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Death
#government
#Medical
#Rain
#Dengue
Abi
1 hour ago
மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 105,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயினால் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், நாடளாவிய ரீதியில் மேலும் 28 டெங்கு அபாய வலய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த முறையான வேலைத்திட்டம் அவசியம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சாமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.