அர்னாப் சூறாவளி தாக்கம் - கடற்படையினர், மீனவர்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Fisherman #LANKA4 #Warning #Cyclone Arnab
Thamilini
1 hour ago
அர்னாப் சூறாவளி தாக்கம் - கடற்படையினர், மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலவும் ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி, ‘மிகத் தீவிர சூறாவளியாக’ (Very Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளது. 

இதன்காரணமாக, குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்தப் பகுதிகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், கொழும்பு முதல் முல்லைத்தீவு வரையிலான (காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு வழியாக) ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும், அங்கு காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!