பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இயற்கை எய்தினார்!
#India
#LANKA4
#Singer
#funeral
Abi
57 minutes ago
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமான இவர், 300இற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.
குறிப்பாக, ‘பொற்காலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றார்.
அன்னாரின் உடல், சென்னையின் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.