கலா ஓயாவில் வெள்ள அபாயம்! தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

#SriLanka #people #LANKA4 #Warning #Flood
Abi
1 hour ago
கலா ஓயாவில் வெள்ள அபாயம்! தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை

கலா ஓயா நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கலா ஓயாவின் நீர்மட்டம் வெள்ள அபாய நிலையை அண்மித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், விநாடிக்கு 13,200 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. 

நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீர்வரத்தைப் பொறுத்து, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் நீர் வெளியேற்றத்தின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லுவ மற்றும் கருவலகஸ்வெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட கலா ஓயாவின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. 

எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள், பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!