கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து சுரேஷ் சாலே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இடைக்கால மனுக்கள் தள்ளுபடி!
#SriLanka
#ARREST
#CourtOrder
#petition
#Suresh Sallay
Thamilini
1 hour ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் அதிகாரி சுரேஷ் சாலே தாக்கல் செய்திருந்த இடைக்கால மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
குறித்த மனுவில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டுத் தனது தரப்பை முன்வைக்க அனுமதியும் கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கோரிக்கைகளை நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த இடைக்கால மனுக்களை வணக்கத்திற்குரிய பெங்கமுவே நலக்க தேரோ உள்ளிட்ட துறவிகள் குழு ஒன்று தாக்கல் செய்திருந்தது.