பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த அறிவியல் மையத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த நூலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமானம் நிலையம் வந்தடைந்தார்.
முதலமைச்சர் விஜய்க்கு கோவை மாநகர காவல்துறை சாரில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், நூலக முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதையடுத்து பெரியார் அறிவுலகம் நூலகத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்.