கனடாவில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூவர் மரணம்
#Death
#CANADA
#Accident
#Hospital
#Road
#LANKA4
#fire
#L4
Prasu
2 hours ago
கனடாவின் கலகரி நகரின் ஈகிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற கோர வாகன விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு மாநகரப் பேருந்துகள் உட்பட மொத்தம் எட்டு வாகனங்கள் சிக்கியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மற்ற 5 பேரின் காயம் உயிர் ஆபத்தை விளைவிக்காதவை என்பதால் சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பணியில் இருந்த கல்கரி காவல் துறை அதிகாரி ஒருவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.