INDvsWI - நான்காவது T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிய வருகிறது.
அந்தவகையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது T20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 247 ஓட்டங்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், ஹோப் 102 ஓட்டங்களும் ரூதர்போர்டு 49 ஓட்டங்களும் குவித்தனர்.
அதனை தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 223 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
இந்திய அணி சார்பில், சஞ்சு சாம்சன் 56 ஓட்டங்களும் திலக் வர்மா 43 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.