பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

#SriLanka #Pakistan #LANKA4 #T20 #Cricket #L4
Prasu
1 hour ago
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, பாகிஸ்தான் மாறும் இலங்கை இடையேயான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில், அரபாத் 34 ஓட்டங்களும் பர்ஹான் 76 ஓட்டங்களும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 17.1 ஓவர்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூன்றாவது போட்டியில் ஆட்டநாயகன் விருதை குசல் மெண்டிஸ் கைப்பற்றியுள்ளார்.

மேலும், தொடரின் நாயகன் விருதை பாகிஸ்தான் அணி தலைவர் பர்ஹான் வென்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!