ஜிபூட்டி அருகே படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 139 புலம்பெயர்ந்தோர் மரணம்

#Death #Accident #LANKA4 #Boat #Rescue #L4 #Djibouti
Prasu
1 hour ago
ஜிபூட்டி அருகே படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 139 புலம்பெயர்ந்தோர் மரணம்

ஜிபூட்டி கடற்கரைக்கு அப்பால் அக்டோபர் 8-9 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட இரவில் படகு ஒன்று மூழ்கியதில், 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 139 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 84 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகமை ஒன்று தெரிவித்தது.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) அறிக்கையின்படி, ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்கு 305 பேருடன் சென்ற அந்தப் படகு, ஜிபூட்டியின் ஓபோக் (Obock) நகருக்கு வடக்கே கவிழ்ந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

பப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீரிணையைத் கடந்து ஏமன் வழியாக வளைகுடா நாடுகளை அடைய முயற்சிக்கும்போது, ​​இந்தப் புலம்பெயர்வுப் பாதையில் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் ஆபத்துகளை இந்தத் துயரச் சம்பவம் ஒரு கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது" என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

மீட்கப்பட்ட 109 உடல்களில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!